நான் ஏன் பதவி விலக வேண்டும் ? – கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நீடிக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், நான் ஏன் பதவி விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர்களும் தங்களை பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது ஆளும் அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கர்நாடக பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. மேலும், குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாஜக வினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று முதல்வர் குமாரசாமி அவர்கள், கூட்டணி அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டும் கர்நாடகாவில் எனது தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்படாது என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024