தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இந்தி மொழியை வலிந்து திணித்திருப்பது கண்டனத்திற்குரியது-வைகோ
தமிழக அரசின் பேருந்துகளில் இந்தி மொழியை எழுதி அதன் மூலம் இந்தி மொழி திணிக்க முயற்சிக்கும் ஆளும் அதிமுக அரசுக்கும் திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதனை பின்னர் போக்குவரத்து கழகம் கனிமொழி கருத்து தொடர்பாக விளக்கம் அளித்தது.அதில் அண்டை மாநிலத்தில் வடிவமைக்கப்பட்ட பேருந்து என்றும் அது நீக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் அரசு பேருந்துகளில் இந்தி மொழியை வலிந்து திணித்திருப்பது கண்டனத்திற்குரியது .இந்திக்கு ஏற்றம் தரும் வகையில் அரசு செயல்படுவது ஏற்கவே முடியாத நடவடிக்கையாகும் .அரசு பேருந்துகளில் தமிழையே புறக்கணிக்கும் அளவுக்கு எப்படி துணிச்சல் வந்தது? என்றும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.