நாங்கள் போருக்கு அஞ்சமாட்டோம்! மக்களின் நலனுக்காக எதையும் எதிர்கொள்ள தயங்கமாட்டோம்! – சவுதி அரேபியா திட்டவட்டம்!
சில நாட்களுக்கு முன் ஓமன் வளைகுடாவில் என்னை தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான் நாடுதான் என சவுதி அரேபியா குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், ஓமன் வளைகுடாவில் எண்ணெய் டேங்கர்களை தாக்கியது நாங்கள் இல்லை என ஈரான் கூறியிருந்தது. இந்தக் கூற்றை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்திருந்தார்.
இது தொடர்பாக சவூதி அரேபிய நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகையில், ‘ நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால், எங்கள் மக்களின் இறையாண்மை நலனுக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த ஒரு விஷயத்தையும் எதிர்க்க தயங்க மாட்டோம்.’ என கூறியுள்ளார். இந்த அறிக்கை சவுதி அரேபியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையில் பிரசுரம் ஆகியிருக்கிறது.