யோகா செய்யும் முன்னனர் நாம் செய்ய வேண்டிவை!
நமது உடல் பருமனாக உள்ளது, நாம் மிகவும் சோர்வாக இருக்கிறோம், நமக்கு ஏதேனும் நோய் வந்துள்ளது உடனே மருத்துவமனைக்கு செல்கின்றோம் அவர் தினமும் யோகா செய்ய சொல்கிறார். மறுநாள் காலையில் எழுந்து உடனே ஏதேனும் புதிதாய் தொடங்கபட்ட யோகா வகுப்பில் சேர்ந்து நானும் யோகா செய்கிறேன் என்றால் அது யோகா இல்லை .
யோகாவை செய்ய தொடங்குவதற்க்கே பல வழிமுறைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஏமம். அதாவது, சமூக ஒழுக்கம். பொய் சொல்லாது, யாருக்கும் தீங்கு நினைக்காமல், மனதில் வஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.
அடுத்து நியமம். அதாவது, தன் ஒழுக்கம். நமது உடலை பேணி பாதுகாக்க வேண்டும். பிறகுதான் ஆசனம். உடற்பயிற்சி செய்தல். அதன் பின்னர் பிராணயம். மூச்சு பயிற்சி ஆகும். ப்ரத்யாஹாரம், மனதினை ஒருநிலை படுத்துதல்.
அடுத்ததாக தாரணை, நமது எண்ணமும், செயலும் முக்கிய பங்கு வகிக்கும் நிலை. அதன் பின்னர்தான் தியானம். யோகாவின் கடைசி நிலை சமாதி, அதாவது, தன்னிலையை அறிவது.
இதன் படிதான் யோகாவின் முழு பயனையும் அடைய முடியும். முன்னரே கூறியது போல, யோகா எனப்து நோய் தீர்க்கும் நிவாரணி அல்ல. அது நோய் வராமல் தடுக்கும் வலிமை!