நீட் நுழைவுத்தேர்வு தமிழக மாணவர்களின் பலி பீடமாக உள்ளது- மு.க.ஸ்டாலின்
நீட் நுழைவுத்தேர்வு தமிழக மாணவர்களின் பலி பீடமாக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசுகையில், இந்தி திணிப்பு விவகாரத்தில் மத்திய அரசு பின்வாங்கியதற்கு காரணம் திமுகதான்.நீட் நுழைவுத்தேர்வு தமிழக மாணவர்களின் பலி பீடமாக உள்ளது. ஜூன் 12ல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.