ஒரு ஓவரில் சாதனை படைத்த 0,W,2,W,0,W முகமது நபி!
நேற்றைய போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணி இறுதியாக இலங்கை 36.5 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்தது. மழை காரணமாக Duckworth முறைப்படி 41 ஓவராக மாற்றப்பட்டு 187 இலக்காக நிர்ணயித்தனர்.
பின்னர் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் இறுதியாக 32.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 152 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் முகமது நபி 22-வது ஓவர் வீசினார். அந்த ஓவர் அவரின் ஐந்தாவது ஓவராகும்.22-வது ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்டை பறித்தார்.மேலும் இப்போட்டியில் முதல் நான்கு விக்கெட்டை பறித்தும் முகமது நபி.