சமுக வலைதளங்களில் வெளியான காட்சிகள் பொய்யானது – தேர்தல் ஆணையம்
கடந்த சில நாட்களாகவே தேர்தல் ஆணையம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது.குறிப்பாக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்வது போன்று சமுக வலைதளங்களில் காட்சிகள் வெளியானது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.அதில் வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பான அறையில் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் 2 முறை தாழிடப்பட்டு சீலிடப்படுகிறது.
இந்த பணிகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே 24 மணி நேரமும் காவலுக்கு உள்ளனர்.
தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக வேறு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்வது போன்று சமுக வலைதளங்களில் வெளியான காட்சிகள் பொய்யானது என்று தெரிவித்துள்ளது.