இந்திய இராணுவத்தில் அடுத்த அதிரடி…. அதிர்ச்சியில் உற்று நோக்கும் அந்த சில நாடுகள்…. கெத்து காட்டும் இந்திய இராணுவம்……..

Default Image

நமது அண்டை நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து இந்திய தன்னை தற்க்காத்துக்கொள்ளவும் பதிலடி தரவும் இந்திய இராணுவம் அவ்வபோது அதிநவீன இராணுவ தளவாடங்களை உருவாக்கியும்,கொள்முதல் செய்தும் நம் இராணுவத்தை நவீனப்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக,இந்திய ராணுவத்திற்கு 17 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் தென்கொரியாவின் ஹான்வ்ஹா நிறுவனத்தின் 104 கே30 ரக  பிஹோ விமான எதிர்ப்பு இயந்திரங்கள் மற்றும் இந்த இயந்திரங்களுடைய  தாக்குதல்  ஆயுதங்களை சுமந்து செல்லும் 97ஆயுத வாகனங்கள்  மற்றும் 39 கட்டளை வாகனங்கள் மற்றும்  4928 ஏவுகணைகள் மற்றும் 1,72,000 30 மில்லிமீட்டர் நீளமுள்ள  தோட்டாக்களும்  வாங்கப்பட உள்ளது.

Image may contain: one or more people and outdoor

இந்த இயந்திரத்தில் ஒரு நிமிடத்திற்கு 600 தோட்டாக்களை சுடும் திறனுடையது.இதில்  30மில்லிமீட்டர் துப்பாக்கிகள் மற்றும் நான்கு ஏவுகணைகள் இருக்கும்.துப்பாக்கியின் இலக்கு  தாக்குதல் எல்லை 3கிலோமீட்டர் மற்றும் ஏவுகணையின்  இலக்கு தாக்குதல் எல்லை 7கிலோமீட்டர் வரை  செல்லும் திறனுடையது  ஆகும்.மேலும் 25 டன்கள் எடை கொண்ட இந்த தாக்குதல் வாகனம் 60கிலோமீட்டர் வேகம் வரை செல்லும் திறனுடையது.

 

Image may contain: sky, outdoor and nature

மேலும் இது 570 கிலோமீட்டர் இயங்கும் எல்லை கொண்டது.இந்திய இராணுவத்திற்க்கு பல வருடங்களுக்கு பின்னர் இந்திய ராணுவத்தின் வான் எதிர்ப்பு ஆயுத தேவையை பூர்த்தி செய்ய தற்போது முயற்சி எடுக்கப்பட்டிருப்பது இந்திய மக்களிடையே மிகிழ்ச்சி அளிக்கிறது.வான் எதிர்ப்பு அதிநவீன இயந்திரங்கள் வாங்க இந்திய ராணுவம் நடத்திய தேர்வில் ரஷ்ய இராணுவ  இயந்திரங்கள் தோல்வியடைந்தன.அதனால்  இராணுவத்தினருக்கு தேவையான அதிநவீன இயந்திரங்கள் வாங்க தென் கொரியாவிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதனால் இந்திய இராணுவத்தின் புதிய அவதாரத்தால் உற்சாகமிகுதியில் திழைக்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi