வேகமாக வளர்ந்து வரும் நமது பரதம்,பணமில்லா பரிவர்த்தனைக்காக படை எடுக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்,இனி வருகிறது வாட்ஸ் ஆப் பே

இந்தியாவும் இந்தியர்களும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாத நிகழ்வாகவும் கருப்புதினமாகவும் கருதும் நாள் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் நமது பாரத பிரதமர் அவர்களால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையாகும்.இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது,பணப்புழக்கம் குறைந்து இ பரிவர்த்தனை முறைக்கு மாறினார்.அப்போது எலெக்ட்ரானிக் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பே டிஎம் எனப்படும் தனியார் நிறுவனம் அதீத கொண்டாட்டத்தில் இருந்தது.மற்றொருபுறம் நடுவண் அரசும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டது.
இந்நிலையில், மக்களின் பரவலான பயன்பாட்டுக்கு உரியதாக மாறிப்போனது பே டிஎம் பண பரிவர்த்தன நிறுவனம். இந்நிலையில், இந்தியாவில் `வாட்ஸ்அப் பே’ எனப்படும் பணப்பரிவர்த்தனை முறையை விரைவில் அறிமுகப்படுத்தப்போவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த தகவல் தற்போது பே டி.எம் எனப்படும் பணப்பரிவர்த்தனை நிறுவனத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே பணப்பரிவர்தனை அமேசான் நிறுவனம், தற்போது தான் இந்தியாவில் ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்களுக்கு `அமேசான் பே’ என்ற பண பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்தியிருந்தது.
இதேபோல் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய `கூகுள் பே’வை தற்போது வரை இந்தியாவில் சுமார் 4.5 கோடி பேர் பயன்படுத்தி வருவதாகவும், நடப்பு மாதம் முன்பு வரை சுமார் 81 பில்லியன் டாலர் அளவுக்கு பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மற்றொருபுறம் ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் பேவும், மிகக் குறைந்த விலையிலான ஆப்பிள் ஐபோன்களுடன் இந்தியாவில் இந்த பணப்பரிவர்த்தனை துறையில் காலடி எடுத்து வைக்கத் தயாராகிவருகிறது.வளர்ந்து வரும் இந்தியாவில் பணப்பரிவர்த்தனையில் பணமில்ல பரிவர்த்த்னையாக மாறிவருவதை அறிந்த அயல் நட்டு நிருவனங்கள் இந்திய மீது படை எடுக்க தொடங்கியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024