சிக்கித் திணறி, தட்டுத்தடுமாறி ரன் சேர்த்த பெங்களூரு! ராஜஸ்தானுக்கு 159 ரன்கள் இலக்கு !
- ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி முதல் ஆட்டத்தில் 158 அடித்துள்ளது
ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டி தற்போது ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்களால் துவக்கம் முதலே சரியாக ஆடவில்லை முடியவில்லை .
அந்த அணியின் கேப்டன் விராட் கோலி 25 பந்துகளுக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் கடுமையாக சொதப்பினர் டிவில்லியர்ஸ் 9 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். பார்த்தீவ் பட்டேல் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் மட்டும் ஓரளவிற்கு நன்றாக ஆடினார்.
பர்த்திவ் 41 பந்துகளில் 67 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 28 பந்துகளில் 41 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் பெங்களூரு அணி சிக்கித் திணறி 158 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்ஸ்ரேயஸ் கோபால் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.