திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு: வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன் !!திமுக பி.சரவணன்

- அதிமுக வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
- தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன் என்று திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், தேர்தல் நடந்த நேரத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதிமுக வேட்பாளராக ஏ.கே.போஸை அங்கீகரித்து வேட்பு மனுவில், இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுச் செய்து, தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.அதில் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.மீதிவுள்ள 3 தொகுதிகளில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இந்த தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன் என்பவர், தேர்தல் ஆணையத்திடம் கடிதம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன்.தொகுதி மக்களின் நலன் கருதி இடைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இதனால் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024