தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர்…உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு….!!
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசு அடைகின்றது என பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்து வந்தது.இதையடுத்து தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசு அடைவது தொடர்பாக மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் ராமையன்பட்டியை சேர்ந்த காட்டுராஜா என்பவர் வழக்கு தொடுத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.இந்த வழக்கு விசாரணையை அடுத்து தாமிரபரணி ஆற்றில் எங்கெங்கு எல்லாம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார். மேலும் கழிவுநீர் கலப்பது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உயர்நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது.