நடுராத்திரி ஆகியும் தூக்கம் வரவில்லையா? நிம்மதியாக தூங்க உதவும் 7 வழிகள்.!

Default Image

இளமைப்பருவத்தில் நாம் தூங்காமல் பல விஷயங்களையும் செய்து கொண்டிருந்திருப்போம்; ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்ததும் பலருக்கும் சரியாக தூக்கம் வருவதில்லை. எவ்வளவு முயற்சித்து பார்த்தாலும் தூக்கம் என்பது மட்டும் எட்டாத வரமாகி விடும்; தூக்கம் சரிவர கிடைக்காததாலேயே உடல் நோய்களின் கூடாரமாகிவிடத் தொடங்கும்.

தூக்கம் எனும் ஒற்றை விஷயம் கிடைக்காததால், வாழ்க்கையே பிரச்சனைகள் நிறைந்ததாக, மகிழ்ச்சி – நிம்மதியற்றதாக மாறிவிடும். ஆகையால் இந்த தூக்கமின்மை என்ற பிரச்சனைக்கு துரிதமாக முடிவு கட்ட வேண்டியது அவசியம்.

இரவில் – விரைவில் நிம்மதியான தூக்கத்தை பெற உதவும் சில வழிகள் குறித்து இந்த பதிப்பில் காணலாம்.

விருப்பத்தை விடுங்கள்

‘தூங்க வேண்டும் தூங்க வேண்டும்’ என தூக்கத்தை துரத்திக் கொண்டிருக்காமல், உடல் சோர்வடைந்து தூக்க உணர்வை இயற்கையாகவே ஏற்படுத்தும் வகையில் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க முயலுங்கள்.

நன்கு உடல் களைப்படைய உழைத்தால், மனதில் எதையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் இருந்தால் நிச்சயம் தூக்கம் வந்தே தீரும்.

டைரி எழுதுங்கள்

இரவு நேரத்தில் தூக்கம் வராத சமயங்களில் அன்றைய நிகழ்வுகளை சிந்தித்து பார்த்து டைரி எழுதுங்கள்; சிறு சிறு விஷயங்களையும் விடாது சிந்தித்து குறிப்பெடுங்கள். மூளை களைப்படையும் வரை அதற்கு வேலை கொடுத்தால், உடல் கூட விரைவில் களைப்பை எட்டும்; அதன் பின் நீங்கள் தூங்குவதை நீங்களே நினைத்தாலும் தடுக்க இயலாது.

சக்திமான் நண்பன்

சிலரின் பேச்சைக் கேட்டாலே நமக்கு தூக்கம் கண்களைச் சொருகிக் கொண்டு வரும்; அப்படிப்பட்ட நபரை கட்டாயம் ஒவ்வொருவரும் அவர்தம் வாழ்வில் சந்தித்து இருப்போம்.

இப்படிப்பட்ட குணாதிசயம் கொண்ட நண்பர் உங்களுக்கு இருந்தால், தூங்க வேண்டும் என நினைக்கையில் அவரிடம் பேச தொடங்குங்கள்; அப்படி பேசினாலே போதும், நிச்சயம் உங்களுக்கு தூக்கம் வந்துவிடும்.

சுடுநீர் குளியல்

உடல் பொறுத்துக் கொள்ளும் சூடுள்ள நீரில், நன்கு நீராடிவிட்டு உறங்கச் சென்றால் எந்தவித முயற்சியும் செய்யாமல் உறக்கம் எளிதில் உங்களை வந்தடையும்.

நெட்டி முறியுங்கள்

தூங்கச் செல்லுமுன் சிறிய ஸ்ட்ரெச்சிங்க் உடற்பயிற்சிகளை செய்து, உடலை நெட்டி முறித்தால் உறக்கம் விரைவில் ஏற்பட்டுவிடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

படியுங்கள்

பலருக்கும் படித்தால் உடனே உறக்கம் வந்துவிடும்; அதிலும் வெளிச்சம் சற்று குறைவான அறையில் படிக்கத் தொடங்கினால் அதிவிரைவில் தூக்கம் ஏற்பட்டுவிடும்.

யோகா – தியானம்

இரவு தூங்கச் செல்லுமுன் மனதை ஒருநிலைப்படுத்தி, தூக்கம் என்ற ஒரு விஷயத்தை பற்றி மட்டும் உங்கள் மனம் எண்ணும் அளவு ஆழ்ந்த தியானம் செய்தால், உங்களுக்கு தூக்கம் விரைவில் வந்துவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்