கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: சிபிஐ விசாரணை கோரிய டிராபிக் ராமசாமி மனு தள்ளுபடி
உச்சநீதிமன்றம் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மற்றும் சயன் ஆகியோர் கூறிய தகவல்கள் தமிழக அரசியல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கொடநாட்டில் கொள்ளை,கொலை அங்கு நடந்த மர்மங்களுக்கு காரணம் தமிழக முதல்வர் தான் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் கூறிய பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின் கொடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொடநாடு விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய டிராபிக் ராமசாமி மனுவை தள்ளுபடி செய்தது.