வளர்ச்சி திட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்டதில் விருதுநகர் No.1 அசத்தும் ரிப்போர்ட்….!!
பின்தங்கிய மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளில் சிறப்பாக செயல்பட்டதில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 111 மாவட்டங்கள் இடம் பெற்ற இந்த பட்டியலில் விருதுநகர் மாவட்டத்திற்கு தான் முதல் இடம். இந்தியாவில் கல்வி, விவசாயம், நீர் நிலைகள், ஆரோக்கியம், நிதி சேர்த்தல், திறன் வளர்ச்சி, அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் மாவட்டங்களின் பட்டியலை ‘நிதி ஆயோக்’ வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. விருதுநகரை தொடர்ந்து, ஓடிஷாவின் நபாடா மாவட்டம் இரண்டாவது இடத்திலும், உத்திர பிரதேசத்தின் சிதார்த்நகர் மூன்றாவது இடத்திலும் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் இந்தப் பட்டியலில், 20வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
நிதி ஆயோக் பட்டியலில், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நிதி ஆயோக் பட்டியல்
1.Virudhunagar (Tamilnadu)
2.Nuapada (Odisha)
3.Siddharthnagar (Uttar Pradhesh)
4.Aurangbad (Bihar)
5.Karaput (Odisha)