14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் தடை….மீறினால் ரூ 1,00,000 அபராதம்…அரசு எச்சரிக்கை…!!
தடை ஜனவரி வருகின்ற ஜனவரி 1ஆம் ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தினை தடை விதிக்க தமிழக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் சுற்றுசூழலுக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அரசின் இந்த நடைமுறையினால் மக்காத பிளாஸ்டிக் தாள் , மக்காத பிளாஸ்டிக் தட்டு, மக்காத பிளாஸ்டிக் டீ கப், மக்காத தண்ணீர் கப் , தண்ணீர் பாக்கெட் , பிளாஸ்டிக் உறிஞ்சு குழல் , பிளாஸ்டிக் கைப்பை மற்றும் பிளாஸ்டிக் கொடி என 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல பிளாஸ்டிக் தடையில் இருந்து விளக்கு அளிக்கும் பொருட்களின் பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பால் , தயிர் ,எண்ணைய் பாக்கெட், மற்றும் மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு பிளாஸ்டிக் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் , 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடை இன்னும் சில நாட்களில் அமலுக்கு வர இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.