இத்தாலி சிசிலி தீவில் திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் பீதி…!!
இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் தீடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மவுண்ட் எட்னா என்ற எரிமலை வெடிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஐரோப்பா நாட்டின் மிகப்பெரிய எரிமலை என்று அழைக்கப்படும் மவுண்ட் எட்னா என்ற எரிமலை இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் அமைந்துள்ளது.இந்நிலையில் இந்த தீவில் ரிக்டர் அளவுகோலில் 3.3 என்ற அளவிலானா லேசான தீடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.இந்த சூழ்நிலையில் தற்போது எட்னா என்ற எரிமலையானது வெடிக்கத் தொடங்கியுள்ளது.
எரிமலை வெடிப்பினால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலம் காட்சியளிக்கின்றது. எட்னா எரிமலை வெடிப்பை அடுத்து சிசிலி தீவில் உள்ள கட்டானியா விமான நிலையம் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது. இந்த எட்னா எரிமலையின் வெடிப்பானது அடிக்கடி நிகழ்வதாக இத்தாலி தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.