மத்திய பிரதேசத்தில்முடிவுக்கு வந்தது 15 ஆண்டு கால பாஜக ஆட்சி …! ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு …!

Default Image

மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல்

நேற்று காலை முதல் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திற்கு நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இந்நிலையில் 22 மணி நேர வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் 
பாஜக 109 இடங்களிலும்,பகுஜன் சமாஜ் கட்சி இரு தொகுதிகளை வென்றுள்ளது. சமாஜ்வாதி கட்சி ஒரு தொகுதியில் வென்றுள்ளது. 4 தொகுதிகளை சுயேச்சைகள் கைப்பற்றி உள்ளனர்.

அறுதிப் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு குறைந்தபட்சம் 116 எம்எல்ஏக்கள் பலம் தேவை. எனவே மத்திய பிரதேசத்தில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலை எழுந்தது.

Image result for rahul modi

ம.பி.யில் பேரவை தேர்தல் முடிவில் பின்னடைவை சந்தித்தாலும் வாக்குகளில் முன்னிலை பெற்றது பாஜக .ஒட்டு மொத்தமாக பாஜக 41% (1,56,42,980) வாக்கு, காங்கிரஸ் 40.9% (1,55,95,153) வாக்கு பெற்றது.ம.பி.யில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 47,827 ஆகும்.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவிப்பு வெளியிட்டார் .அதில்  பாஜக மீதான அதிருப்தியின் காரணமாகவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். பாஜக பட்டியல் இன மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் ஆதரவு அளிக்கும் என்றும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.மேலும் தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்க  பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல்.
அழைப்பை தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறது மத்திய பிரதேச காங்கிரஸ் குழு.

எனவே 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜகவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்