வசூல் சாதனையை சீனாவிலும் நடத்த தயாரான இந்தியாவின் பிரமாண்டம் 2.O!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து உலகம் முழுவதும் வசூல் சாதனை நடத்தி வரும் திரைப்படம் 2.O. இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருந்தது. இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படம் உலகம் முழுவதும் சுமார் 450 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. இன்னும் நன்றாக ஓடி கொண்டிருப்பதாலும், இந்த வாரமும் எந்த பெரிய படமும் வராமல் இருப்பதும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. ஆதலால் இந்த வாரமும் இதன் வசூல் நன்றாக இருக்கும் என நம்பப்படுகிறது.
தற்போது, இதனை தயாரித்த லைகா நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்தை சீனாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். ஏற்கனவே அங்கு பாகுபலி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது அதனை தொடர்ந்து இந்த படமும் சீனாவில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
source : cinebar.in