இந்தியா, ஸ்பெயின் கைதிகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளலாம்…!!
இந்தியா மற்றும் ஸ்பெயின் இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் பரஸ்பர ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவில் குற்றம்புரிந்துவிட்டு வெளிநாடுகளில் சில குற்றவாளிகள் தலைமறைவாகிவிடுகின்றனர். அவர்களை மீண்டும் இந்தியா அழைத்து வர வேண்டுமென்றால் இருநாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் அமலில் இருக்க வேண்டும். இந்தநிலையில் ஸ்பெயினுடன் இந்தியா மேற்கொண்ட கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் கைதிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படாது என ஸ்பெயினிடம் இந்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதேபோல் கைதிகளை பரிமாறிக்கொள்ளும்போது அவர்களது உடல்நிலை, வயது, மனநிலை போன்றவை கருத்தில் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.