உயிர் இல்லாச சிலைக்கு ரூ.3000 கோடி..!உயிர் வாழ துடித்து கொண்டிருப்பவர்களுக்கு ரூ.353 கோடியா…கனிமொழி காரசார கேள்வி..!!
கஜா புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படுள்ள நிலையில் புயல் கடந்து 16 நாட்கள் ஆகிய நிலையிலும் அந்த துயரில் இருந்து விடுபட முடியாமால் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நிவாரணங்கள் அவர்களின் தற்போதைய நிலையில் இருந்து காப்பாற்றும் நிலையில் பின் அவர்களின் வாழ்வாதாரம் என்ன..? என்றால் பெரிய கேள்வி கூறியாகவே உள்ளது.தன் பார்த்து பார்த்து வளர்த்த ஆடு,மாடுகள் உள்ளிட்ட விளைநிலங்களையும் பரிகொடுத்து பரிதவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு ரூ.15,00 கோடியை நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்று பிரதரை நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய அறிக்கை அளித்தார்.இதனிடையே முன்னதாக மின்சாரத் துறைக்கு ரூ.200 கோடியை அளித்த நிலையில் தற்போது இடைக்கால நிவாரண நிதியாக ரூ.350 கோடியை ஒதுக்கி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு திமுக எம்பியான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் உயிரற்ற பட்டேல் சிலைக்கு ரூ.3000 கோடியாம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட தமிழர்களுக்கு ரூ.350 கோடியாம்.என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
DINASUVADU