ட்விட்டர் சிஇஓ மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!ட்வீட் எதிர்கொள்ளுமா..??
ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே பிராமண சமூகத்தைக் காயப்படுத்தியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றத்தில் ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது விப்ரா என்கிற அறக்கட்டளையின் துணைத்தலைவர் ராஜ்குமார் சர்மா என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த வழக்கில் எதற்காக என்றால் ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே இந்தியா வந்த போது சர்ச்சையான சம்பவம் அது ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே தனது ட்விட்டர் பக்கத்தில் ’பிராமண ஆதிக்கம் ஒழிக’ என்பது போன்ற ஒரு அட்டையைக் கையிலேந்திய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருந்தார்.இது பெரும் சர்ச்சையான நிலையில் டிவிட்டர் தரப்பில் விளக்கம் அளிக்கபட்டது.இந்நிலையில் இந்த பதிவு பிராமணர்களுக்கு எதிரானதாக மட்டுமல்லாமல் அந்த சமூகத்தினரைக் காயப்படுத்தும் விதமாக உள்ளது என வழக்கு தொடர்ந்த ராஜ்குமார் சர்மா தனது மனுவில் கூறியிருந்தார்.