5-இலிருந்து 9 : இது மக்கள் செல்வன் கணக்கு

Default Image
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பை பிரபலங்கள் கூட பாராட்டிவருகின்றனர். வருடத்திற்கு 6 படமாவது கொடுத்து வருகிறார். இன்னும் சொல்லப்போனாலும் அடுத்த வருடத்திற்கு உண்டான படங்கள் கூட இப்போது இவரின் கைகளில். சமீபத்தில் இவர் நடித்த புரியாத புதிர் நீண்ட நாள் தடைகளுக்கு பிறகு வெளியானது.
அதற்கு முன் வெளியான விக்ரம் வேதா இவருக்கு வெற்றி கொடுத்தது. இனி இம்மாதம் 29 ம் தேதி இவர் நடித்துள்ள கருப்பன் படமும் ரிலீஸ்க்கு ரெடி. இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
தற்போது படங்களில் நடிக்க ரூ 5 கோடி சம்பளம் வாங்கி வரும் இவர் தொடர் வெற்றிகளால் தன் சம்பளத்தை ரூ 9 கோடிக்கு உயர்த்திவிட்டார் என சொல்லப்படுகிறது.
பிசியாக இருக்கும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் கிடைத்தால் போதும் கூடுதலாக ரூ 1 கோடி சேர்த்து 10 கோடியாக கொடுக்கலாம் என தயாரிப்பாளர்கள் சிலர் காத்திருக்கிறார்களாம்.
Posted in UncategorizedTagged

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்