வேட்டுக்கு வேட்டு வைத்த பின்னும் ஏகிரிய நச்சு காற்று….!!அச்சத்தில் மக்கள்..!
டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையை எட்டியுள்ளதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
டெல்லியில் காற்று மாசு அடுத்த இரு தினங்களுக்கு தொடரும் என்று காற்று தரத்தை மதிப்பிடும் அரசு முகமை தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற பட்டாசு போன்ற வெடிகளை வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு தீபாவளியன்று நாடெங்கும் எதிரொளித்தது. கட்டுப்பாடுகளையும் மீறி டெல்லியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடிக்கப்ட்படதாகக் கூறப்படுகிறது.இதனால் அங்கு காற்றின் தர மதிப்பானது, மிக மோசமாக பிளஸ் நிலைக்கு வந்துள்ளது இந்த பிளஸ் என்பது அவசர நிலை என்பதைக் குறிக்கும்அதாவது காற்று மாசு 574ஐ எட்டியுள்ளது.
மேலும் பட்டாசு வெடித்ததால் டெல்லியை சூழ்ந்த புகையால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.மேலும் இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உடல்நலனில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வானிலை மற்றும் ஆராய்ச்சி அமைப்பு கடுமையாக எச்சரித்துள்ளது. மேலும் தற்போது இருக்கும் காற்று மாசுவின் நிலை 8 மற்றும் 9 ஆனது இன்னும் இரு நாட்களுக்கு அப்படியே தொடரும் என்றும் இந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்த புகையால் மக்கள் மூக்கை முடிக்கொண்டும்,கண் எரிச்சலுடனும் வீதிகளில் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.இந்த மாசு டெல்லி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU