மகா புஷ்கர விழா 18 MLA உட்பட 23 லட்சம் பேர் பங்கேற்பு….!விமர்சையாக நிறைவு…!!
தாமிரபரணி மகா புஷ்கர விழா 18 MLA உட்பட 23 லட்சம் பேர் பங்கேற புஷ்கரவிழா நிறைவு பெற்றது.
தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் தீர்த்தக்கட்டங்கள், படித்துறைகளில் தினமும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து புனித நீராடினர்.
நெல்லை புறநகர் மாவட்டத்தில்மட்டும் உள்ள 25 தீர்த்தக்கட்டம் மற்றும் படித்துறைகளில் 4 லட்சத்து 85 ஆயிரத்து 693 ஆண்களும், 6 லட்சத்து 9 ஆயிரத்து 800 பெண்களும் என 10 லட்சத்து 95 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். அதேபோல் நெல்லை மாநகரில் உள்ள 4 படித்துறைகளில் மட்டும் 2¼ லட்சம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 27 படித்துறைகளில் மொத்தம் 9 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.என்று போலீஸ் கண்க்கெடுப்பில் முலம் தெரியவந்துள்ளது.மேலும் 2 மாவட்டங்களையும் (நெல்லை மற்றும் தூத்துக்குடி) சேர்த்து தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மொத்தம் 22 லட்சத்து 80 ஆயிரத்து 493 பக்தர்கள் புனித நீராடி உள்ளனர் தெரிவித்தனர். மேலும் புஷ்கரவிழாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 MLA க்கள் புனித நீராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU