அரசியல்வாதிகள் அஞ்சும் லோக் ஆயுக்தா……..அக்கரை இல்லாத தமிழக அரசு………..உச்சநீதிமன்றம் சாடல்..! தமிழகத்தில் 3 மாதங்களில் அமைக்க……கிடுக்குடி…வசமாக சிக்கிய தமிழக அரசு…..!!

Default Image

லோக் ஆயுக்தாவை தமிழகத்தில் 3 மாதங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்பான உத்த்ரவை உத்தரவிட்டுள்ளது.
Related image
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவை இதுவரை அமைக்காதது குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசு இதுவரைஆர்வம் காட்டவில்லை என்பதை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருவதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
Image result for supreme court
லோக் ஆயுக்தா அமைப்பதில் அக்கறை இல்லையா அல்லது கால தாமதம் செய்வதையே தமிழக அரசு விரும்புகிறதா என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பான தகவல்களை பிற்பகலில் அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
Image result for tamilnadu logo
இதையடுத்து பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்த போது சரமாரி கேள்விக்கு பதில் அளித்த தமிழக அரசு அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் லோக் ஆயுக்தா செயல்பாட்டுக்கு வரும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்