ரூ 11,000,00,00,000..அடித்தது அதிஷ்டம்..!!
அமெரிக்காவில், லாட்டரி சீட்டு ஒன்றில் ரூ.11 ஆயிரம் கோடி பரிசு விழுந்துள்ளது
அமெரிக்காவில் லாட்டரி விற்பனைக்கு தடை இல்லை. அங்கு பெருந்தொகைகளை பரிசாகக் கொண்ட லாட்டரி குலுக்கல்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மெகா மில்லியன்ஸ் நிறுவனம், முதல் பரிசாக சுமார் 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரத்து 100 கோடி) அறிவித்து, லாட்டரி சீட்டு வெளியிட்டது. இந்த லாட்டரி சீட்டு அங்கு அமோக வரவேற்பை பெற்றது.அந்த சீட்டின் குலுக்கல் முடிந்து முடிவு வெளியாகி உள்ளது. இதில் முதல் பரிசு 1.5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.11 ஆயிரத்து 100 கோடி), தெற்கு கரோலினா மாகாணத்தில் விற்பனையான லாட்டரி சீட்டுக்கு விழுந்து உள்ளது.
இந்த லாட்டரி சீட்டை வாங்கிய உலக மகா அதிர்ஷ்டசாலி யார் என இன்னும் தெரியவரவில்லை. அவரை தேடுகிறார்கள்.அந்த அதிர்ஷ்டசாலி, வரிகள் கழித்து 878 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 ஆயிரத்து 497 கோடி) தொகையை பெற்று வீட்டுக்கு எடுத்துச்செல்ல முடியும் என தகவல்கள் கூறுகின்றன.
DINASUVADU