ரூ.70,00,00,00,000 எங்கே..வங்கிகளுக்கு ஆபத்து…அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!

Default Image

கடந்த மூன்றாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்த்த மோசடியால் வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பெரிய பெரிய தொழிலதிபர்கள் முறையான ஆவணம் இல்லாத போலி பத்திரங்கள் கொடுத்தும் , கடன் வாங்கிக் கொண்டு கட்டாமல் நாடு விட்டு நாடு தப்பி ஓடி கிட்டத்தட்ட கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளனர்.
இது குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.அதில் இப்படி எல்லாம் வங்கிகளில் மோசடி செய்யலாமா என்ற ஆதாரபூர்வமான ஆதாரங்கள் இணைக்கப்பட்டு இருந்தது.அதில் ஜீவல்லரி ,உற்பத்தி , வேளாண்மை ,ஊடகம் ,விமான போக்குவரத்து , சேவைத்துறை உட்பட 13 துறைகளில் மோசடி எப்படி நடந்துள்ளது என ஆராயப்பட்டு இருந்தது.கடன் பெற்று மோசடி செய்த நபர் , அந்த நிறுவனம் என முழு விவரம் ஆதாரத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது.அதே சமயம் இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீதும் , இதற்க்கு உதவிய வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.
ஜீவல்லரி துறையினர் வங்கியை ஏமாற்றியதற்கு உதாரணம் நீரவ் மோடி , மெகுல் சோக்சி.இந்த துறையில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் வைரங்கள் மதிப்பை மிக அதிகமாக காண்பித்து கடன் பெற்றுள்ளனர்.ஆனால் அவர்கள் உண்மையில்  ஏற்றுமதி இறக்குமதி செய்த மதிப்பு மிகவும் குறைவே ஆகும்.
உற்பத்தி நிறுவனம் நிதிநிலை அறிக்கையில் அந்நிறுவனத்துக்கு அதிக லாபம் வருவதை போன்று போலியாக சமர்ப்பித்து கடன் பெற்றுள்ளனர்.உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் நிறுவனத்தின் லாபம் மிக குறைவாக இருக்கு.
நிரந்தர சேமிப்புக் கணக்கு மோசடி நிறுவனர் வங்கியின் பிரதிநிதிகள் நிதி ஆலோசகர்கள் என்றும் ,வங்கிக்கு தன்னால் அதிக டெபாசிட் பெற்றுத்தர முடியும் என்று  கூறி மோசடி செய்கின்றனர்.வங்கிகள் ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கும் உறுதியளிப்பு கடிதத்தை மட்டும் வைத்துக் கொண்டு 12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளது நீரவ் மோடி கோஷ்டி.

2017-2018_ஆம் நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்த்த மோசடி
ரூபாய் கோடியில் 
பஞ்சாப் நேஷனல் வங்கி  6,461.13
பாரத ஸ்டேட் வங்கி 2,390.75
பேங்க் ஆப் இந்தியா 2,224.86
பேங்க் ஆப் பரோடா  1,928.25
அலகாபாத் வங்கி 1,520.37
ஆந்திரா வங்கி 1,303.30
யூகோ வங்கி  1,224.64
ஐடிபிஐ வங்கி 1,116.53
யூனியன் பேங்க் ஆப் இந்தியா 1,095.84
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 1,084.50
பேங்க் ஆப் மகாராஷ்டிரா 1,029.23
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 1,015.79
கார்ப்பரேஷன் வங்கி 970.89
யூனைடெட் பேங்க் ஆப் இந்தியா 880.53
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் 650.28
சிண்டிகேட் வங்கி 455.05
கனரா வங்கி 190.77
பஞ்சாப் சிந்த் வங்கி 90.01
தேனா வங்கி 89.25
விஜயா வங்கி 28.58
இந்தியன் வங்கி 24.23

 
வங்கிகளில் கடன் என்ற பெயரில் மோசடி நடைபெறும் பட்சத்தில் அதற்க்கு எந்த அளவில் வங்கி அதிகாரிகளுக்கு பொறுப்பு உள்ளது என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் , இத்தகைய மோசடியில் சில ஆடிட்டர்கள் , வழக்கறிஞர்களுக்கும் பொறுப்புள்ளது. போலியான ஆவணம் தயாரித்து கொடுக்கும்  ஆடிட்டர்களும்  அதற்க்கு சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் இனி தப்பிக்க முடியாத சூழலை உருவாக்க வேண்டும் என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
DINASUVADU 
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்