ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான்..!குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு
ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் சில பிரச்சனைகள் இருப்பது உண்மைதான்.ஆனால் நீண்ட நிவாரணத்திற்கு குறுகிய கால வலியை பொறுத்துக்கொள்ள வேண்டும்.அதேபோல் நமக்கு கீழ் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்வதும், அவர்களை பார்த்துக்கொள்வதும் தான் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.