உருளை கிழங்கு உண்பது சரியா…? தவறா…?
உருளைக்கிழங்கு என்பது அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு காய்கறி தான். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர். இது ஆரோக்கியமான காய்கறி தான்.
உருளைக்கிழங்கில் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றி என பல சத்துக்கள் உள்ளது. உருளைக்கிழங்கு சாப்பிடுவது நல்லது தான். ஆனால் இது சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தக்க்கூடியது.
- உருளைக்கிழங்கை உடல் பருமன் அதிகரிக்க ஆசைப்படுபவர்கள் சாப்பிடலாம், ஆனால் உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் அது சில ஆரோக்கிய கேடுகளை உண்டுபண்ணுகிறது.
- உருளை கிழங்கை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது தான், ஆனால் இதனை தொடர்ச்சியாக சேர்த்துக்கொள்ளும் போது சில வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
- உருளைக்கிழங்கு ஹைப்போடென்ஸனை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. ஹைப்போடென்ஷன் என்பது உடலில் இரத்த அழுத்தத்தின் அளவு மிக குறைவதாகும்.
- உருளைக்கிழங்கில் அதிக அளவு ஆக்சிஜனேற்றிகள் உள்ளது. ஆனால் அதிக அளவு ஆக்சிஜனேற்றி உடலில் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது.
- உருளைக்கிழங்கு கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஏற்றதல்ல.
DINASUVADU