"அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக மாறிய கிரிஜா வைத்தியநாதன்" முக.ஸ்டாலின் வேதனை..!!
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்ட்டம் குறித்து திமுகவின் தலைமை கழகம் சார்பில் முக.ஸ்டாலின் வெளியிடட செய்தி குறிப்பில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக மாறிவிட்டார் என்று வேதனை தெரிவித்துள்ளார்.
அது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை , காலம் கடந்து ஞானம் பிறந்ததை போல, கண்கெட்டப் பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போல,எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நாங்களும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்று எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தமிழகம் முழுவதும் விழா எடுத்தது. ஒவ்வொரு விழாவிலும் எம்.ஜி.ஆர். பற்றி புகழ்பாடவில்லை. எம்.ஜி. ஆர். புகழைப் பற்றி பேசவில்லை. அவர் மக்களுக்கு செய்த திட்டங்கள் பற்றியெல்லாம் எதுவும் பேசவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளைப் பற்றி தரக்குறைவாக வசைபாடி எடப்பாடி பழனிச்சாமியும் பேசி வருகிறார்.சில சமயங்களில் கதைகளையும் அள்ளி விடுகிறார்.அதுமட்டுமில்லாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எதிர்க்கட்சியினரை வசைபாடுவதற்கே இந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களைப் பயன்படுத்தியுள்ளனர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் முழுக்க முழுக்க அரசுப் பணத்தைத்தான் கொள்ளை அடிக்க இவர்களுக்குப் பயன் பட்ட ஆயுதமே எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக் கூட்டங்கள். ஒரு கட்சிக் கூட்டத்தில் பேசுவதைவிட அரசு விழாவில் எதிர்க்கட்சியினரை வசை பாடுவது ஜனநாயக மரபு அல்ல,ஜனநாயக முறையும் அல்ல,ஆனால் ஜனநாயக மரபையும், முறையையும் மீறுவதுதான் இந்த எடப்பாடி அரசின் தலையாய கடமை.ஆனால் இந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதன் ஜனநாயக மரபை மீறுபவர்களின் பேச்சினை கேட்டு செவி மடுத்து ரசித்துச் சிரித்ததுதான் வெட்கக்கேடான ஒன்று.அவர் தலைமைச் செயலாளராக இல்லை. அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறி விட்டார் போலத் தான் தெரிகின்றது.சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடல், நந்தனத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் இருந்து அரசுப் பேருந்துகளில் கிராமப் புறத்து மக்களை பணம் கொடுத்து அள்ளிக் கொண்டு வந்தார்கள். அவர்கள் சென்னைக்கு வந்ததும் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்குச் செல்லவில்லை. இந்த எடப்பாடியும், ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்களும் என்ன பேசுவார்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியாதா என்ன. நூற்றாண்டு விழாவிற்கு வந்த அவர்கள் அனைவரும் சென்னை கடற்கரைக்குச் சென்று விட்டனர். ஒரு அரசு விழாவில் எதிர்க்கட்சியினரை, குறிப்பாக தி.மு.கவை வம்புக்கு இழுத்துப் பேசும்போது உண்மையிலேயே ஒரு அரசு அதிகாரி, அதுவும் தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் – தமிழகத்தின் உயர் பதவியில் இருப்பவர் கிரிஜா வைத்தியநாதன் வாய்க்கு வந்தபடி அரசு விழாவில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் எதிர்க் கட்சியினரை வஞ்சித்துப் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார் என்றால் இவரும் இதற்கு துணை போய் இருக்கிறார் என்பதுதானே பொருள். உண்மையிலேயே அரசு விழாவில் எதிர்க்கட்சியினரை குறை கூறவோ, குற்றம் சொல்லவோ கூடாது என்பது கூட ஒரு தலைமைச் செயலாளராக இருக்கும் கிரிஜா வைத்தியநாதனுக்குத் தெரியாமலா இருக்கும்.
தி.மு.கழவை பற்றி அரசு விழாவில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசியபோது விழாவில் இருந்து வெளியேறி இருப்பாரேயானால் அவர் ஒரு நியாயமான அதிகாரி என்றே கூறலாம். ஆனால், அவரோ அப்பேச்சுக்களை ரசித்து, கேட்கிறார்! சிரிக்கிறார்!! அவர் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அல்ல; அ.தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேதனையுடன் கடித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
DINASUVADU