அமைச்சர்களாக பதவியேற்க உள்ள 9 பேர் பிரதமர், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவுடன் சந்திப்பு

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்படுகிறது. புதிய அமைச்சரவையில் 9 பேர் மத்திய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்கவுள்ளனர்.
அவர்களுக்கு பிரதமர் மோடி தனது இல்லத்தில் விருந்து அளிக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவாக்க விழா நடைபெறவுள்ளது.
இதில் புதிய அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். முன்னதாக, இவர்கள் 9 பேரும், பிரதமர் மோடியையும், பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷாவையும் இன்று காலை சந்தித்து பேசி உள்ளனர்.

Leave a Comment