கரூரில் கொரோனாவில் இருந்து மீண்ட 95 வயது மூதாட்டி.!

கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது நிரம்பிய மூதாட்டி உட்பட ஐந்து நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் கரூரை அடுத்த காந்தி கிராமத்தில் அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 அடுக்குகளுடன் கூடிய பிரமாண்ட கட்டிடத்தில், 300 படுக்கை வசதிகளுடன் 7வது தளத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களையும் சேர்ந்த நோயாளிகளும் கரூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கரூர் மண்டலமாக கருதப்படும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் இன்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 95 வயது நிரம்பிய மூதாட்டியும் பூரண குணமடைந்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
author avatar
Castro Murugan