ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்கள்.! பிரதமர் மோடி உத்தரவு.!

  • டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
  • அப்போது கூட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தாமதமான 9 திட்டங்களை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 9 திட்டங்கள் தாமதமானது குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர் ரயில்வே, சாலை போக்குவரத்து, பெட்ரோலியம் ஆகிய துறைகளில், தாமதமான 9 திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த முறை நடைபெற்ற பிரகதி ஆய்வுக் கூட்டத்தில் 12 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 269 திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்திருந்தார். மேலும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழுவான பிரகதி –  இது மத்திய அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்