தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்கள் செயல்பட அனுமதி.!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

By manikandan | Published: May 30, 2020 10:30 PM

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் தமிழகத்தில் நீதிமன்றங்கள் செயல்படாமல் இருந்து வந்தது. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அவ்வப்போது பிறப்பித்து வருவகின்றன. 

தற்போது தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திருவாரூர், ராமநாதபுரம், தேனி, நாகை, கரூர், சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றம் செயல்படலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Step2: Place in ads Display sections

unicc