8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இல்லை -கல்வி இயக்குநரகம் விளக்கம்

  • 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டு இருந்தார்.
  • தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லைஎன தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம் அளித்து உள்ளது.

இந்த வருடம் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அஅறிவித்து உள்ளது.இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அமையும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

நேற்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் , கண்டிப்பாக இந்த வருடம் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என கூறினார். இந்நிலையில் இன்று 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என சுற்றறிக்கை ஒன்றை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டு இருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில்,தொடக்க கல்வி இயக்குநரகம் விளக்கம் ஒன்றை அளித்து உள்ளது அதில் , தமிழகத்தில் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை வேளைகளில் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு இல்லை என கூறியுள்ளது.

author avatar
murugan