கேரளாவில் இன்று மேலும் 84 பேருக்கு கொரோனா.!

இன்று மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1088 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலத்தில் குறைய தொடங்கிய கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1004 லிருந்து 1088 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 84 பேரில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 48 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பயணிகளுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில முதலவர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இன்று 3 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை அங்கு 555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கேரளாவில் 526 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் வீட்டு கண்காணிப்பில் 114,305 பேரும் மருத்துவமனையில் 992 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்