ரயில் பெட்டிகளில் கொரோனா சிகிச்சை மேற்கொண்ட 80 பேர் டிஸ்சார்ஜ்…!

ரயில் பெட்டிகளில் 146 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 80 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, மருத்துவமனைகளில் ஏற்படும் படுக்கைகள் பற்றாகுறை பிரச்சனையை போக்க ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வே துறை மாற்றி வருகிறது.

அந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 4,000 ரயில் பெட்டிகளில் 64,000 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ரயில் பெட்டிகளில் 146 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 80 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 66 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே இதுபோன்ற வசதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு படுக்கைகளுடன் கூடிய ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகளில், நோயாளிகளின் வசதிக்கேற்ப பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.