80% கொரோனா பாதிப்பு 10 மாநிலங்களில் உள்ளது – பிரதமர் மோடி

80% கொரோனா பாதிப்பு 10 மாநிலங்களில் உள்ளது – பிரதமர் மோடி

80% கொரோனா பாதிப்பு 10 மாநிலங்களில் உள்ளது என்று  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில்  கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனிடையே பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்தவகையில் கொரோனா தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி இன்று  தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.அதில் அவர் பேசுகையில், கொரோனா தடுப்பு-சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.ஒவ்வொரு மாநிலமும் கொரோனாவை தடுக்க போராடி வருகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது.கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அதிகம் பாதித்த மாநிலங்கள் பேசும் போது தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும்    என்று பேசியுள்ளார்.

Join our channel google news Youtube