80அடி உயரமுள்ள மொபைல் டவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி.!

80அடி உயரமுள்ள மொபைல் டவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி.!

80 அடி உயரமுள்ள மொபைல் டவர் இடிந்து விழுந்ததால் 53 வயதான ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருப்பூரில் வீரபாண்டி அருகிலுள்ள 80அடி உயரமுள்ள மொபைல் டவர் ஒன்று அதிவேகமாக அடித்த காற்றை தாங்க இயலாமல் இடிந்து விழுந்தது. அந்த மொபைல் டவர் ஹெல்மெட் அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 53 வயதான செங்கிஸ்கான் மீதும், ஒரு லாரி மீதும் விழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று காலை 11.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த செங்கிஸ்கான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

லாரிக்கும், லாரி டிரைவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. மொபைல் இடிந்து விழுந்ததால் திருப்பூர் - பல்லடம் சாலையில் 30 நிமிடங்களுக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனையடுத்து வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையில் இடிந்து விழுந்த மொபைல் டவரை அகற்றினர். அதன் பின்னர் பலியானவரின் உடலை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மொபைல் டவர் சில ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். மொபைல் டவர் இடிந்து விழுந்து ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Latest Posts

ரசிகர் தவறவிட்ட காலணியை கையில் எடுத்து கொடுத்த விஜய்..!
பார்வையிழந்த ரசிகருக்கு எஸ்.பி.பி கொடுத்த சர்ப்ரைஸ் - இணையத்தை கலக்கும் வீடியோ!
நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும் - சீமான்!
தந்தை ,மகன் கொலை வழக்கு - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த சிபிஐ
பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம்!
#BREAKING: பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல்.. ஹெச்.ராஜா பெயர் இடம் பெறவில்லை..!
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் ஆலோசனை
மாணவ - மாணவியரின் எதிர்காலத்துடன் கொரோனா ஒருபுறமும் , அதிமுக அரசு மறுபுறமும் விளையாடுகிறது - மு.க. ஸ்டாலின்
பிறந்தநாள் வாழ்த்துக்கள், எங்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்!
"தேசிக விநாயகம் பிள்ளை" நினைவு நாளில், தமிழ் உணர்வை நினைவுகூர்ந்து போற்றி வணங்குகிறேன்- பன்னீர்செல்வம்..!