நியூசிலாந்தில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தாவுக்கு விக்டோரியா என்ற  8 வயது சிறுமி சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.அக்கடிதத்தில் சிறுமி ” தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், ஆகவே அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அந்த சிறுமி எழுதி இருந்தார்.

மேலும் அக்கடிதத்தில் நியூசிலாந்து நாட்டு 5 டாலர்களையும்  அதாவது (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி உள்ளார்.சிறுமியின் கடிதத்தை பார்த்த பிரதமர் ஜெசிந்தா வேடிக்கையாக நினைத்து கொள்ளாமல் ஜெசிந்தா தனது கைப்பட அந்த சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

அதில் அவர், “டிராகன்கள் மற்றும் உளவியல் குறித்த உங்களது ஆலோசனைகளை நாங்கள் கேட்க ஆர்வமாக உள்ளோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக டிராகன்கள் குறித்து எந்த பணிகளையும் நாங்கள் மேற்கொள்ள முடியவில்லை.

மேலும் நீங்கள் கொடுத்த லஞ்சத்தை அதை திருப்பி தந்துவிடுகிறேன்”. என அந்த கடிதத்தில் ஜெசிந்தா கூறி இருந்தார்.