பெண்களே உஷார்! இந்த 8 இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஸ்பை கேமராக்கள் வைத்திருக்கலாம்!

49
பெண்களே உஷார்! இந்த 8 இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஸ்பை கேமராக்கள் வைத்திருக்கலாம்!

தொழிற்நுட்ப வளர்ச்சிக்கு எல்லை இல்லை என்பது நிதர்சனம் தான். என்றாலும் இதன் தாக்கம் மக்களை நல்ல முறையில் சென்றடைந்தால் அதில் தவறில்லை. ஆனால், அதுவே மிக மோசமான முறையில் சென்றடைந்தால் அதை நாம் கவனமாக கையாள வேண்டுவது அவசியம். இதே நிலை தான் தற்போது ஏற்பட்டு உள்ளது.

மிக சிறிய அளவிலான கேமராக்களை கொண்டு பெண்களை தவறான முறையில் ஆபாசமான படங்களை எடுத்து, அதனை வைத்து அவர்களது வாழ்க்கையோடு சிலர் விளையாடி வருகின்றனர். இப்படிப்பட்ட ஸ்பை கேமராக்களிடம் நாம் நிச்சயம் மிக உஷாராக இருத்தல் வேண்டும். இனி எப்படிப்பட்ட இடங்களில் இந்த வகையான ஸ்பை கேமராக்கள் வைப்பார்கள் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

ஸ்பை கேமராக்கள்
இந்த ஸ்பை கேமராக்கள் ஒரு சில சிக்கலான இடங்களில் மட்டுமே வைக்கப்படும். இவற்றை நாம் பெரும்பாலும் கண்டு கொள்வதுமில்லை.
வை-பை ஏசி அடாப்டர் என்கிற ஸ்பை கேமராவை ஏசியின் துளைகளில் வைத்திருக்க வாய்ப்புகள் உள்ளது.
மொபைல் சார்ஜர் ஸ்பை கேமரா-வை மொபைல் சார்ஜர்களில் வைப்பார்கள்.
கடிகார வானொலி ஸ்பை கேமரா-வை கடிகாரத்தின் நடுவில் வைத்து உங்களை வேவு பார்க்க இயலும்.

ஷவர் ஸ்பை கேமரா போன்றவற்றை குளியல் அறையில் வைத்து உங்களை ஆபாச முறையில் கண்காணிக்க முடியும்.
ஸ்பை ஷூ கேமரா மூலம் உங்களை எளிதில் கண்காணிக்க இயலும்.
பெல்ட் ஸ்பை கேமரா போன்றவற்றை பெல்ட்டில் வைத்து அதன் மூலம் அந்தரங்க படங்களை பதிவு செய்ய முடியும்.

பேனா ஸ்பை கேமரா மூலம் கூட நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கண்காணிக்க வழியுள்ளது.
குளியறையில் உள்ள திசு பாக்சில் கூட சில வகையான கேமராக்களை வைக்க இயலும். இந்த வகை கேமராக்கள் வாட்டர் ப்ரூப்ஃ வகையை சேர்ந்தது. ஆதலால், தண்ணீர் பட்டாலும் இது சரியான முறையில் வேலை செய்யும்.

எனவே, பெண்கள் எங்கு சென்றாலும் ஒரு படி ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். மேலும், இது போல தவறான வழியில் தொழிற்நுட்பத்தை பயன்படுத்துவோருக்கு இதே நிலை தான் நாளை அவர்களது வீட்டிலும் நடக்கும் என்பதை புரிந்து கொண்டால் நல்லது.