கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் விதித்த அர்ச்சகர் உட்பட 8 பேர் கைது…!

கர்நாடகாவில் கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞருக்கு அபராதம் விதித்த அர்ச்சகர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கர்நாடக மாநிலம் குல்பர்கா எனும் மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி எனும் நகரை சேர்ந்தவர் தான் 24 வயதுடைய கங்காதர். இவர் தலித் வகுப்பைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. கடந்த 14ஆம் தேதி இவர் கரடகி கிராமத்திலுள்ள மகாலட்சுமி கோவிலுக்குள் சென்று சிறப்பு பூஜை செய்துள்ளார்.

பூஜை முடிந்து அவர் வெளியே வந்ததும் அவரை பார்த்த கோவில் அர்ச்சகர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஊர் பெரியவர்கள் சிலர் ஊர் பஞ்சாயத்தை கூட்டி உள்ளனர். அதன் பின்பு இவர் தலித் இனத்தை சேர்ந்தவர் என்பதால் கோவிலுக்குள் நுழைந்து பூஜை செய்ததற்காக 11,000 அபராதமாக கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர், அத்தனையும் கங்காதர் கடந்த 20 ஆம் தேதி கொடுத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கோவிலுக்கு நுழைந்ததற்கு 5 லட்சம் அபராதமாக ஓரு மாதத்திற்குள் கொடுக்க வேண்டும் எனவும் பஞ்சாயத்தார் எழுதி வாங்கியுள்ளனர். இதுகுறித்து குல்பர்கா மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை விசாரித்த போலீசார் கோவில் அர்ச்சகர் உட்பட 8 பேர் மீது எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் 504, 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

author avatar
Rebekal