அரசு பள்ளியில் ஆசிரியை தாக்கியதில் 8ஆம் வகுப்பு மாணவி மயக்கம்….!


புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நற்சாந்துபட்டியில் இயங்கி வருகிற அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி சுபலேகா, ஆசிரியை தாக்கியதில்   மயங்கி விழுந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள நற்சாந்துபட்டி அரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவி சுபலேகா. சுபலேகாவின் தம்பியும் அதேபள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள் சுபலேகாவின் தம்பியை அடித்துள்ளனர். இதனால் சுபலேகா, பள்ளி ஆசிரியையிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த பள்ளி ஆசிரியை சுபலேகாவை அவரது கையால் அக்குழந்தையின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே மாணவி சுபலேகா மயக்கமடைந்து விழுந்தார். உடடினயாக திருமயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுபலேகாவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *