புல்வாமா தாக்குதல் வழக்கில் 7- வது நபர் கைது - என்.ஐ.ஏ தகவல் .!

புல்வாமா தாக்குதலில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு

By murugan | Published: Jul 08, 2020 02:52 PM

புல்வாமா தாக்குதலில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்  சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி, தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது.  இந்த தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு இன்னும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இந்த தாக்குதலில் யார் யார் ஈடுபட்டுபட்டது, தாக்குதலுக்கு எங்கு வாகனம் வாங்கப்பட்டது, வாகனத்தை யார் கொடுத்தார்கள், வெடிபொருட்கள் எங்கு வாங்கப்பட்டது, என பல கேள்விகள் எழுந்த நிலையில் இவற்றிக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. பிலால் அகமது குச்சே என்பவர் கடந்த 5-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு முகமை தகவல் தெரிவித்துள்ளது.
Step2: Place in ads Display sections

unicc