அரசின் 79 கேள்விகள்.. ஜூலை 22-க்குள் பதிலளிக்காவிட்டால் டிக்டாக் உட்பட 59 செயலிகள் நிரந்தரமாக தடை!

டிக்டாக் உட்பட 59 செயலிகள், அரசு அறிவித்துள்ள 79 கேள்விகளுக்கு ஜூலை 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் அந்த செயலிகளுக்கு நிரந்தரமாக தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த தாக்குதலில் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் மேலும் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பிளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து அந்த செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடைசெய்யப்பட்ட அந்த 59 செயலிகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) ஒரு அறிவிப்பை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது. அந்த அறிவிப்பில், 72 கேள்விகளை கொண்ட பட்டியலை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.

இந்த சீன பயன்பாடுகளுக்கு அனுப்பப்பட்ட 79 கேள்விகளின் முழுமையான பட்டியல் அவற்றின் பெருநிறுவன தோற்றம், பெற்றோர் நிறுவனங்களின் அமைப்பு, நிதி, தரவு மேலாண்மை, நிறுவனத்தின் நடைமுறைகள் மற்றும் அவை பயன்படுத்தும் சேவையகங்கள் பற்றி விளக்கமளிக்குமாறு தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான தரவை தவறாகப் பயன்படுத்த வழிவகுக்கும் பாதுகாப்பு அம்சங்களுடன், இந்த நிறுவனங்களால் “அங்கீகரிக்கப்படாத தரவு அணுகல்”  (unauthorised data access) தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் கேட்டுள்ளது.

அரசாங்கத்தின் வட்டாரங்கள் கேள்வித்தாளுடன், மத்திய அமைச்சகதின் அறிவிப்பில், “ஐ.டி சட்டத்தின் 69 வது பிரிவின் கீழ் பயன்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டது மற்றும் ஒரு இறையாண்மை கொண்ட அரசின் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள்” என்று கூறுகிறது.

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க அவர்களுக்கு ஜூலை 22 க்குள் பதிலளிக்க அவகாசம் வித்திட்டுள்ளதாகவும், அவ்வாறு பதிலளிக்கவில்லை என்றால், அந்த செயலிகள் மீது விதிக்கப்பட்ட தடை நிரந்தரமாக மாறக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.