கம்பெனியின் சொத்தாக மாறியது 75 வயது ராட்சத முதலை..!

உகாண்டாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் சொத்தாக 75 வயது ராட்சத முதலை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

உகாண்டா நாட்டில் இருக்கும் விக்டோரியா ஏரியில் 16 அடி நீளமுள்ள ராட்சத முதலை இருந்து வந்தது. மேலும் இந்த முதலை 1991 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அங்கிருக்கும் லூகானா கிராமத்தை சேர்ந்த மக்களை கொன்று தின்றுள்ளது. இந்த ராட்சத முதலைக்கு 80 மக்கள் பலியாகியுள்ளனர். அதனால் இந்த முதலையை அங்கு வசிக்கும் மக்கள் ஒசாமா பின்லேடன் என்று பெயர் வைத்துள்ளனர்.

முதலையால் மக்கள் பலர் கொல்லப்படுவதால் இதற்கு முடிவு கட்ட எண்ணி 2005 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு வார காலமாக வனத்துறை அதிகாரிகளும், அங்கு வசிக்கும் 50 மக்களும் சேர்ந்து இந்த முதலையை பிடித்துள்ளனர். ஒசாமா முதலை பின்னர் வனத்துறைகளின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

75 வயதான முதலையை உகாண்டாவின் ‘க்ரோக்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் அதனது சொத்தாக மாற்றியுள்ளது. இந்த நிறுவனம் முதலையின் தோலின் மூலமாக கைப்பைகள் தயாரிக்கிறது. இந்த கைப்பைகளை தென்கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அதன் காரணத்தால் இந்த ஒசாமா பின்லேடன் என்ற முதலை அந்த நிறுவனத்தின் சொத்தாக மாறியுள்ளது.