தூத்துக்குடி கோயில் கும்பாபிஷேகத்தில் 74 பவுன் நகை திருட்டு..!

தூத்துக்குடி சிவன் கோயிலில்  14 ஆண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர்கள் பல பெண்களிடம் நகைகளைத் திருடியது தெரியவந்தது.

நகையைப் பறிகொடுத்த பெண்கள், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த காவல் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் செய்தனர். விசாரணையில், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற 14 பெண்களிடம் ஏறத்தாழ 74 பவுன் நகைகள் திருடப்பட்டிப்பது தெரியவந்தது. 

இதனிடையே, நகையைப் பறிக்க முயன்றதாக 3 பெண்களைப் பிடித்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்தப் பெண்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment