71வது சுதந்திர தின விழா.. அமெரிக்காவில் இந்தியர்கள் கோலாகல கொண்டாட்டம்

0
229

கலிபோர்னியா: இந்தியாவின் 71வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்கள் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட சுதந்திர தின கொண்டாட்டம் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் குழந்தைகளுக்கான விளையாட்டு, உணவுத் திருவிழா, நடனப் போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள், பேச்சுப் போட்டிகளை நடத்தி அசத்தி இருக்கிறார்கள் இந்தியர்கள்.
சுதந்திர தினத்தையொட்டி இசை வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு நிகழ்ச்சிகள் கலிபோர்னியாவின் சாலைகளில் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வண்ண வண்ணமாய் தேசியக் கொடி கொண்டு அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.
இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கலாச்சார நடனங்களை ஆடிப்பாடி சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here