மஹாராஷ்டிரா புதிய துணை முதல்வர் மீதான 70,000 கோடி ஊழல் வழக்கு ரத்து!

மஹாராஷ்டிராவில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் முதலைமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் இதற்கு முன்னர் பாஜக அரசானது அஜித் பவார் மீது 70,000 கோடி நீர்பாசன திட்டத்தில் ஊழல் முறைகேடு தொடர்பாக நடவடிக்கை எடுத்திருந்தது. அந்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என ஊழல் தடுப்பு துறை அவரை விடுவித்து ஓர் புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவர் மீதான இந்த 70,000 கோடி ஊழல் வழக்கு நேற்று முடித்துவைக்கப்பட்டது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.